Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான்: சீனா கடும் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான்: சீனா கடும் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 31 July 2023 8:17:24 PM

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான்: சீனா கடும் குற்றச்சாட்டு

பீஜிங்: அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக 1949ல் தைவான் சுதந்திர நாடானது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி சீனா போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

allegation,america,ammunition,china,taiwan,warehouse ,அமெரிக்கா, கிடங்கு, குற்றச்சாட்டு, சீனா, தைவான், வெடிமருந்து

தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை தைவானுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன் மூலம் தைவானை தனது வெடிமருந்து கிடங்காக அமெரிக்கா மாற்றி விட்டதாக சீனா குற்றம்சாட்டியது.

Tags :
|
|