Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடுகளை நேரில் சென்று அமித்ஷா ஆய்வு

டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடுகளை நேரில் சென்று அமித்ஷா ஆய்வு

By: Karunakaran Tue, 16 June 2020 11:00:52 AM

டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடுகளை நேரில் சென்று அமித்ஷா ஆய்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது. மூன்றாவதாக டெல்லி உள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லியில் நேற்றைய நிலவரப்படி, 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1300க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

delhi,amit shah,coronavirus,delhi hospital ,டெல்லி,அமித்ஷா,கொரோனா சிகிச்சை,மருத்துவமனை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி முதல்-மந்திரி, துணைநிலை கவர்னர் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது, டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று கொரோனா சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அமித்ஷா நேரில் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது. டெல்லியில் அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து கொரோனாவை ஒழிக்கும் பணியில் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என அமித்ஷா கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர், புதிய தீர்மானங்கள் மூலம் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :
|