Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித் ஷா; பாஜக தலைவர்கள் ட்விட்

இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித் ஷா; பாஜக தலைவர்கள் ட்விட்

By: Monisha Sat, 21 Nov 2020 11:44:45 AM

இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித் ஷா; பாஜக தலைவர்கள் ட்விட்

கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். விழாவில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இது குறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அமித் ஷாவின் வருகை பாஜகவினருக்கு உற்சாகம் அளித்துள்ளது. சென்னை வரும் அவரை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். அமித் ஷாவை வரவேற்று சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

amit shah,chennai,twitter,foundation,election ,அமித் ஷா,சென்னை,ட்விட்டர்,அடிக்கல்,தேர்தல்

அமித் ஷாவை வரவேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரதத்தின் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே! தமிழகம் வரும் தலைமகன் அவர்களே வருக வருக!! என எல்.முருகன் குறிப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்! எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே’ என கூறி உள்ளார்.

Tags :