Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தர பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முதல்வரிடம் கூறிய அமித் ஷா

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முதல்வரிடம் கூறிய அமித் ஷா

By: Karunakaran Fri, 03 July 2020 12:18:11 PM

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முதல்வரிடம் கூறிய அமித் ஷா

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாகவே உள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அரியானா, உத்தர பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய தேசிய தலைநகர பிராந்தியத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தியபோது, அதிக பரிசோதனைகளை செய்து, பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே மருத்துவமனைகளில் சேர்த்து உயிரிழப்பு விகிதங்களை குறைக்க வலியுறுத்தினார்.

uttar pradesh,corona testing,yogi adhithyanath,amit shah ,உத்தரபிரதேசம், கொரோனா சோதனை, யோகி ஆதித்யநாத், அமித் ஷா

உத்தர பிரதேசத்தில் குறைந்த அளவில் பரிசோதனை செய்யப்படுவது குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில்தான் குறைந்த கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

டெல்லியில் 10 லட்சம் பேரில் 679 பேருக்கும், குர்கானில் 482 பேருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 10 லட்சம் பேரில் 72 பேருக்கும், காசியாபாத்தில் 78 பேருக்கு மட்டும் ஏன் பரிசோதனை நடத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள பகுதியில் நபர்களுக்கு பரிசோதனையை விரைவுபடுத்த யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

Tags :