Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்குவங்கத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

மேற்குவங்கத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

By: Nagaraj Sat, 19 Dec 2020 11:16:58 PM

மேற்குவங்கத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்... இரண்டு நாள்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா அங்கு விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

மேற்குவங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென திரிணாமூல் காங்கிரஸும் போட்டிகளத்தில் முயன்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு இன்று சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார்.

lunch,amitsha,farmer family,house ,மதிய உணவு, அமித்ஷா, விவசாயி குடும்பம், வீடு

அதைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மேதினிப்பூர் பகுதியில் பேரணியில் பங்கேற்க சென்ற அமித் ஷா, வழியில் பாலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி சனதன் சிங் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

அவருடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, பாஜக தேசிய துணைத்தலைவர் முகுல் ராய் மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அமித்ஷா விவசாயின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags :
|