Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

By: Karunakaran Sun, 20 Dec 2020 10:38:17 AM

மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளம் சென்றார். மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் நேற்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். அப்போது பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் 3 தசாப்தங்களாக ஆட்சி செய்தது. கம்யூனிஸ்டு கட்சிக்கு 27 ஆண்டுகளும், சகோதரி மம்தாவுக்கு 10 ஆண்டுகளும் மக்களாகிய நீங்கள் வழங்கினீர்கள். பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். தங்கம் போன்ற மாநிலம் ஆக மேற்கு வங்காளம் உருமாற்றப்படும் என தெரிவித்தார்.

amitsha,lunch,farmer house,west bengal ,அமித்ஷா, மதிய உணவு, உழவர் வீடு, மேற்கு வங்கம்

வேளாண் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு நண்பகலில் மத்திய மந்திரி அமித்ஷா சென்றார். அவருடன் பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா மற்றும் மேற்கு வங்காள மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் உடன் சென்றனர். அவர்கள் அனைவரும் விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்தபடி மதிய உணவு சாப்பிட்டனர்.

இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், மிட்னாப்பூரின் (மேற்கு வங்காளம்) பெலிஜுரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜுனு சிங் ஜி மற்றும் ஸ்ரீ சனாதன் சிங் ஜி ஆகியோர் வீட்டில் சுவையான மதிய உணவை சாப்பிட்டேன். எங்களுக்கு பலத்த வரவேற்பு அளித்து, அன்பு காட்டிய அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags :
|