Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 ஆண்டுகளாக இருந்த அமோனியம் நைட்ரேட் தான் பேரழிவுக்கு காரணம் - லெபனான் பிரதமர் தகவல்

6 ஆண்டுகளாக இருந்த அமோனியம் நைட்ரேட் தான் பேரழிவுக்கு காரணம் - லெபனான் பிரதமர் தகவல்

By: Karunakaran Wed, 05 Aug 2020 2:22:21 PM

6 ஆண்டுகளாக இருந்த அமோனியம் நைட்ரேட் தான் பேரழிவுக்கு காரணம் - லெபனான் பிரதமர் தகவல்

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அமைந்துள்ள துறைமுகத்தில் நேற்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரையே இந்த வெடி விபத்து உருகுலைய வைத்தது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளிலே ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது. இந்த வெடிவிபத்தின் போது, அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமாகின.

பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணர்ந்தன. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ammonium nitrate,6 years,disaster,lebanese prime minister ,அம்மோனியம் நைட்ரேட், 6 ஆண்டுகள், பேரழிவு, லெபனான் பிரதமர்

தற்போது இந்த விபத்திற்கான காரணம் குறித்து லெபனான் பிரதமர் ஹசன் டியப் கூறுகையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று பிரதமர் ஹசன் டியப் கூறியுள்ளார்.

Tags :