Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமமுக தினகரன் தகவல்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமமுக தினகரன் தகவல்

By: Nagaraj Thu, 26 Nov 2020 4:17:19 PM

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமமுக தினகரன் தகவல்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்... அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தற்போது துவங்கிவிட்டன. பாஜக சார்பில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டார். மேலும், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை குழு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து கருத்து கேட்டு வருகிறது.

tour,tamil nadu,dtv dhinakaran,election,report ,சுற்றுப்பயணம், தமிழகம், டிடிவி தினகரன், தேர்தல், அறிக்கை

மத்தியில் பாஜக ஆதரவு, மாநிலத்தில் ஆட்சி, அதிகாரம் என அதிமுக-வும் அண்டர்கிரவுண்ட்-ல் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், அமமுக-வும் தேர்தலுக்கு தயராகி வருகிறது. இதனை உறுதிப்படும் வகையில், அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை யொட்டி, கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்படும்.

இதற்காக, கழகத்தின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வரும் நவம்பர் 27- ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags :
|