Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை

கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை

By: Monisha Tue, 26 May 2020 3:56:13 PM

கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை

ஜப்பான் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 7 முதல் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதலில் 7 மாகாணங்களில் அமலில் இருந்த ஊரடங்கு பின்னர் ஏப்ரல் 16 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தி பிரதமர் ஹின் அறிவிப்பு வெளியிட்டார். நேற்று அங்கு மொத்தம் 31 பேருக்கு தான் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளார்.

japan,coronavirus,india,11 countries,ban on entry into japan ,ஜப்பான் நாடு,கொரோனா வைரஸ்,இந்தியா,11 நாடுகள்,ஜப்பானில் நுழைய தடை

ஏற்கனவே ஜப்பானில் 118 நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் இந்தியா, ஆப்கானிஸ்தான், அஜெர்டினா, வங்கதேசம், எல்சால்வோதார், கானா, கினியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, கஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த 11 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சில நாட்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தி உள்ளது.

Tags :
|
|