விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும்... அண்ணாமலை உறுதி
By: Nagaraj Wed, 29 Nov 2023 5:27:17 PM
தஞ்சாவூர்: விவசாயம் சார்ந்த தொழிற்சாலை... டெல்டாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளில் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை 107 சதவீதம் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் டெல்டாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும்.
சோழ பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கல்லணை 2 ஆயிரம் ஆண்டாக நிற்கும் நிலையில், தி.மு.க.,வினர் போட்ட ரோடு ஒரு மழைக்கு தாங்கமால் போய்விடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.