Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூரில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மூடிய விமானப்படை தளம்

தஞ்சாவூரில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மூடிய விமானப்படை தளம்

By: Nagaraj Tue, 26 Sept 2023 5:39:06 PM

தஞ்சாவூரில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மூடிய விமானப்படை தளம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை விமானப்படை தளம் முழுமையாக மூடியது. இதனால் 30 ஆண்டுகளாக போராடியும் பயனில்லையே என்று கிராம மக்கள் பெரும் வேதனை அடைந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகே உள்ளது இனாத்துக்கான்பட்டி. இந்த ஊர் தஞ்சாவூர் விமானப்படைத் தளம் அருகே அமைந்துள்ளது. விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்ய இனாத்துக்கான்பட்டி கிராமத்தின் விவசாய நிலங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த ஊரில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமானோர் ஊருக்குள் சென்று, வர புதுக்கோட்டை சாலையில் இருந்த 10 அடி அகலமுள்ள தார் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை மட்டும் பயன்படுத்த விமானப்படை தள நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில் அந்த சாலையில் ஊரின் துவக்கப்பகுதியில் விமானப்படையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்து மூடும் வகையில் இரும்பு கேட் அமைத்தனர். இதனால் கிராம மக்கள் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக சென்று வருகின்றனர்.

air force base,farmland,villagers,footpath,closure ,விமானப்படை தளம், விவசாய நிலம், கிராம மக்கள், நடைபாதை, மூடல்

இதனால் இந்த கிராம மக்கள், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2020ம் ஆண்டுக்கு பின், விமானப்படையினர் இரும்பு கேட்டை மூடி யாரையும் அங்குள்ள சாலை வழியாக செல்ல அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் விமானப்படையினர் இரும்பு கதவை எடுத்துவிட்டு, அங்கு நிரந்தரமாக காம்பவுண்டு சுவர் எழுப்ப இயந்திரங்களை கொண்டு அதற்கான பணிகளை தொடங்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் சக்திவேல், வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் என அங்கு குவிக்கப்பட்டனர்.

அதே போல் விமானப்படை வீரர்கள் அங்கு துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் இலக்கியா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags :