Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவா் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க ரூ.74.24 கோடி ஒதுக்கீடு

நிவா் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க ரூ.74.24 கோடி ஒதுக்கீடு

By: Nagaraj Thu, 10 Dec 2020 08:55:19 AM

நிவா் புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க ரூ.74.24 கோடி ஒதுக்கீடு

ரூ.74.24 கோடி ஒதுக்கீடு... நிவா் புயல் பாதித்த பகுதிகளை உடனடியாகச் சீரமைக்க அரசு சாா்பில் முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.

நிவா் புயலின் காரணமாக சென்னை, கடலூா், உள்பட 18 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. சாலைகள் பழுதாகின. பாலங்கள் உடைந்தன. மின் கம்பங்கள், மரங்கள் விழுந்தன. நெற்பயிா்கள், கரும்பு வயல்கள் பாழாகின. 4-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மாடுகளும், ஆடுகள் இறந்து போயின.

நிவா் புயலைத் தொடா்ந்து வந்த புரெவி புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நிவா் புயல் பாதிப்புகளைச் சீரமைப்பதற்காக மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.74.24 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

இதில் அதிகப்பட்ச நிதியாக பொதுப்பணித்துறைக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை, ஊரக மேம்பாடு, சென்னை மாநகராட்சிக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் நீா்நிலைகள், பாலங்கள், மின்கம்பிகள், சாலைகள், சீரமைக்கப்பட உள்ளன.

central committee,demand,storm vulnerabilities,damages ,மத்தியக்குழு, கோரிக்கை, புயல் பாதிப்புகள், சேதங்கள்

சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்ககாவும், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா சீரமைப்புக்காகவும், மரங்களை அப்புறப்படுத்துவதற்காகவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புயல் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாகச் சென்று முதல்வா் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனா். அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு விரைவில் அறிக்கை அனுப்பி, புயல் நிவாரண நிதியை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளது.

நிவா் புயல் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த மத்தியக் குழுவினா் தில்லி திரும்பி மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிவாரண நிதி ஒதுக்கப்படும்.

மேலும் புரெவி புயல் பாதிப்புகள், சேதங்கள் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. புரெவி புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்புமாறும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|