Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யா – வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கூடுதல் பொருளாதார தடை விதிக்கப்படும்

ரஷ்யா – வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கூடுதல் பொருளாதார தடை விதிக்கப்படும்

By: Nagaraj Thu, 14 Sept 2023 9:41:30 PM

ரஷ்யா – வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கூடுதல் பொருளாதார தடை விதிக்கப்படும்

அமெரிக்கா: கூடுதல் பொருளாதார தடை... ரஷ்யா, வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீதும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா - ரஷ்யா இடையே வளர்ந்து வரும் உறவு கவலை அளிப்பதாகவும், புதின் மற்றும் கிம்மின் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

north korea,aid,russia,criticism,additional,sanctions ,வடகொரியா, உதவி, ரஷ்யா, விமர்சனம், கூடுதல், பொருளாதார தடை

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், உக்ரைன் உடனான போரில், பல்லாயிரக்கணக்கான வீரர்களையும், கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான பணத்தையும் ரஷ்யா இழந்துள்ளதாக கூறினார்.

வடகொரிய அதிபரிடம் உதவி கேட்டு ரஷ்ய அதிபர் புதின் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Tags :
|
|