Advertisement

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

By: vaithegi Fri, 17 Feb 2023 7:19:29 PM

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் : பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.மத்திய பிலிப்பைன்ஸில் அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துவுள்ளது.

மாஸ்பேட் மாகாணத்தின் முக்கிய தீவான மாஸ்பேட்டில், உசன் நகராட்சியில், அருகிலுள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர்தொலைவில் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுவுள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும், ஆனால் சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

earthquake,philippines ,நிலநடுக்கம்  ,பிலிப்பைன்ஸ்


இதையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கங்கள் பிலிப்பைன்சின் தினசரி நிகழ்வாகும், இது பசிபிக் "ரிங் ஆப் பயர்" பகுதியில் அமைந்துள்ளது, இது ஜப்பானிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாட்டின் ஒரு வளைவு ஆகும்.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர்.

Tags :