Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வரும் அக்.28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வரும் அக்.28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sun, 23 Oct 2022 1:10:05 PM

இந்த மாவட்டத்தில்  வரும் அக்.28-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை : வேலைவாய்ப்பு முகாம் ... புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 28 ஆம் தேதி தனியார் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம்.

மேலும் இவர்களின் வயது வரம்பு 18 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகமானது அன்றைய தினம் காலை 9 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

employment camp,pudukottai ,வேலைவாய்ப்பு முகாம்,புதுக்கோட்டை

இதனை அடுத்து இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பெண்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இதனை தொடர்ந்து இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டாடா நிறுவனத்தில் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எக்காரணம் கொண்டும் முகாமில் பணி நியமனம் செய்பவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :