Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து

தாய்லாந்தில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து

By: Nagaraj Mon, 31 July 2023 2:50:28 PM

தாய்லாந்தில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து

தாய்லாந்து: தாய்லாந்தில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தி உள்ளது.

தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கிடங்கில் கடந்த சனிக்கிழமையன்று வெடிவிபத்து ஏற்பட்டது.

warehousing,rescues,ownership,litigation,hospitals ,கிடங்கு, மீட்புப்பணிகள், உரிமையாளர், வழக்குப்பதிவு, மருத்துவமனைகள்

வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட நெருப்பு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், கிடங்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Tags :