Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்து

சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்து

By: Nagaraj Mon, 28 Aug 2023 11:16:48 AM

சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்து

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... மேற்கு வங்கத்தின் 24 பரகனாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

west bengal,consolation,national intelligence,agency,fireworks,bombs ,மேற்கு வங்கம், ஆறுதல், தேசிய புலனாய்வு, முகமை, பட்டாசு, வெடிகுண்டுகள்

இந்த பட்டாசு ஆலையில் பட்டாசுகள் பெயரால் வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததா என்பதைக் கண்டறிய தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Tags :
|