Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நிறைவேறாமல் போன முக்கியமான ஆசை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நிறைவேறாமல் போன முக்கியமான ஆசை

By: Karunakaran Wed, 02 Sept 2020 09:35:11 AM

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நிறைவேறாமல் போன முக்கியமான ஆசை

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்த கட்டி இருப்பதும், கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பின் அவர் கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரணாப் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

important wish,unfulfilled,former president,pranab mukherjee ,பிரணாப் முகர்ஜி,முக்கியமான ஆசை, நிறைவேறாத, முன்னாள் ஜனாதிபதி

இந்நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒரு முக்கியமான ஆசை, நிறைவேறாமல் போய் விட்டது. அது அவரது சுய சரிதையை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் ஆசை ஆகும். அந்த சுய சரிதையை அவரது பால்ய கால நண்பரும், பேராசிரியருமான அமல் குமார் முகோபாத்யாய் எழுத வேண்டும் என்பதே அவரது முக்கியமான ஆசை.

இதுகுறித்து பேராசிரியர் அமல்குமார் முகோபாத்யாய் கூறுகையில், உடல்நலமற்று போவதற்கு சில தினங்களுக்கு முன்பாகத்தான் பிரணாப் என்னோடு தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று காலம் முடிந்ததும் கொல்கத்தா வருகிறேன், முழுமையாக 3 நாட்கள் உனக்கு ஒதுக்கி தருகிறேன். சுய சரிதைக்காக என்னை பேட்டி எடுத்துக்கொள் என்று கூறி இருந்தார். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.

Tags :