Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும்

ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும்

By: vaithegi Wed, 10 Aug 2022 4:04:38 PM

ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும்

சென்னை:அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் அரசு பள்ளிகளில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த உதவித்தொகை பெரும் திட்டத்தில் பல மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தநிலையில், ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. அதனபடி அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்ந்தால் அந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

incentives,women development department ,ஊக்கத்தொகை ,மகளிர் மேம்பாட்டுத் துறை

மேலும், இந்த ரூ.1000 ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவிகள் ஏதேனும் கல்வி உதவித்தொகை வாங்கி கொண்டிருந்தாலும் இந்த ரூ.1000 உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காகவே ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்துள்ள மாணவிகள் அனைவரும் 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 6 மாதமும் மாணவிகளுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்கான சான்றளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :