Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் திறனறிவு தேர்வு .. நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை

தமிழ் திறனறிவு தேர்வு .. நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை

By: vaithegi Fri, 02 Sept 2022 1:51:43 PM

தமிழ் திறனறிவு தேர்வு ..  நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை

சென்னை: தமிழகத்தில் இந்த வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறிவு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் அனைத்து வகை பாடப்பிரிவினை எடுத்து படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

இதனை அடுத்து தமிழ் மொழியில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை உயர்த்த இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

incentive,tamil proficiency test ,ஊக்கத்தொகை ,தமிழ் திறனறிவு தேர்வு

2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் நடைபெற இருக்கும் இத்தேர்வு குறித்து அவ்வப்போது முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50 சதவீதமும், பிற பள்ளி மாணவர்கள் 50 சதவீதமும் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்கு 10ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் தங்களது தலைமையாசிரியர்கள் வழியே விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் . விண்ணப்பத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பம் மற்றும் தகுதி உள்ள மாணவர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடம் இது பற்றி தெரிவித்து தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :