Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எகிப்து ஜெட் விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் எரிபொருள் நிரப்பியது

எகிப்து ஜெட் விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் எரிபொருள் நிரப்பியது

By: Nagaraj Mon, 04 Sept 2023 10:27:00 AM

எகிப்து ஜெட் விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் எரிபொருள் நிரப்பியது

கெய்ரோ: நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது... எகிப்து நாட்டின் ஜெட் விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் Bright Star கூட்டு போர் பயிற்சி கெய்ரோ விமானப்படை தளத்தில் தொடங்கியது.

வரும் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியில், இந்திய விமானப்படை சார்பில் மிக்-29 ரகத்தை சேர்ந்த 5 விமானங்களும், ஐ.எல்-78 ரகத்தை சேர்ந்த 2 எரிபொருள் நிரப்பு விமானங்களும், சி-130, சி-70 ரகங்களை சேர்ந்த தலா 2 விமானங்களும் பங்கேற்றுள்ளன.

cairo air,training,egypt aircraft,fuel,indian air force ,கெய்ரோ வான், பயிற்சி, எகிப்து விமானம், எரிபொருள், இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையின் கருடா சிறப்பு படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 150 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கெய்ரோ வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்து விமானத்திற்கு இந்திய விமானப்படையின் ஐ.எல்-78 ரக எரிபொருள் நிரப்பு விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.

Tags :
|