Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் இந்திய வம்சாவளி சமையல் கலைஞர்

மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் இந்திய வம்சாவளி சமையல் கலைஞர்

By: Nagaraj Sat, 06 May 2023 5:45:36 PM

மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் இந்திய வம்சாவளி சமையல் கலைஞர்

லண்டன்: “பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்” பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மஞ்சு மல்ஹியும் ஒருவர்.

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க உலக தலைவர்கள் லண்டனில் முகாமிட்டுள்ளனர். விழாவைக் காண முழு இங்கிலாந்தும் தயாராகி வரும் நிலையில், சார்லஸை ஏற்றிச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி புத்துயிர் பெற்றுள்ளது.

பிரித்தானிய மன்னர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திய 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் விழாவிற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. செயின்ட் எட்வர்டின் கிரீடம் சார்லஸ் மன்னரின் தலையில் வைக்கப்பட்டதால், அவரது மனைவி கமிலா அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்தின் ராணியாக அறிவிக்கப்படுவார்.

attendance,chef,coronation,england,indian-origin,king,woman , இங்கிலாந்து, இந்திய வம்சாவளி, சமையல் கலைஞர், பங்கேற்பு, பெண், மன்னர், முடிசூட்டு விழா

இந்தியாவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். உலகத் தலைவர்கள், இங்கிலாந்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் உட்பட சுமார் 2,000 பேர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, “பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்” பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மஞ்சு மல்ஹியும் ஒருவர். கொரோனா காலத்தில் அவர் செய்த சிறந்த சேவைக்காக ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|