Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாரத்தானில் ஷாமல்பூரி சேலை அணிந்து பங்கேற்ற இந்திய பெண்

மாரத்தானில் ஷாமல்பூரி சேலை அணிந்து பங்கேற்ற இந்திய பெண்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:31:48 PM

மாரத்தானில் ஷாமல்பூரி சேலை அணிந்து பங்கேற்ற இந்திய பெண்

மான்செஸ்டர்: ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய உடையான ஷாமல்பூரி சேலை அணிந்து மாரத்தானில் இந்திய பெண் பங்கெடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் நிலையில், ஒரு பெண் தனது திறமையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இது இங்கிலாந்திலேயே இரண்டாவது பெரிய மாரத்தான் போட்டியாகும். இந்த மாரத்தானில் பலர் கலந்து கொண்டனர். ஒடிசாவைச் சார்ந்த 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.

video viral,marathon,saree,competition,manchester ,வீடியோ வைரல், மாரத்தான், சேலை, போட்டி, மான்செஸ்டர்

ஆனால் ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய உடையான ஷாமல்பூரி சேலை அணிந்து மாரத்தானில் பங்கெடுத்ததுதான் சிறப்பு வாய்ந்தது ஆகும்.மதுஸ்மிதா உலக அளவில் நடைபெறும் பல மாரத்தான் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மான்செஸ்டர் நகரத்தில் நடந்த மாரத்தான் 42.5 கிமீ தூரத்தை கிட்டத்தட்ட 4மணி நேரம் 50 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

ஷாமல்பூரி சேலை என்பது ஒடிசாவின் பாரம்பரிய கைத்தரி நெசவு சேலையாகும். இதில் பூரி ஜெகன்னாதரின் உருவம் மற்றும் மலர்கள், சக்கரம் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிவப்பு, வெள்ளை , கருப்பு ஆகிய நிறங்களில் இந்த சேலைகளில் பெரும்பாலும் நெய்யப்படுகின்றன.

சேலை அணிந்து கொண்டு மாரத்தானில் கலந்து கொண்டு 42.5 கிமீ ஓடியது அனைவராலும் கவரப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|