Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக எம்எல்ஏவின் மகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்தும் விசாரணை

பாஜக எம்எல்ஏவின் மகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்தும் விசாரணை

By: Nagaraj Sat, 04 Mar 2023 6:50:06 PM

பாஜக எம்எல்ஏவின் மகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்தும் விசாரணை

பெங்களூரு: பாஜக எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்தை பெங்களூருவில் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

பிரசாந்த் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrest,bjp,bribe,mla. son,rs 40 lakh, ,எம்.எல்.ஏ. மகன், கைது, பா.ஜனதா, ரூ.40 லட்சம், லஞ்சம்

மேலும் இவர் முன்பு ரூ.55 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, 2017-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் உதவி கணக்கு அதிகாரியாக பிரசாந்த் பணியாற்றி வந்தார். அப்போது அரசுக்கு சொந்தமான ரூ.55 கோடியை சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்திருந்ததார்.

அதாவது, வங்கியில் இருந்த ரூ.55 கோடியை வேறு சில வங்கிகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இதையடுத்து, பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ரூ.55 கோடி முறைகேடு தொடர்பான வழக்கை சிஐடி விசாரிக்க வேண்டும். காவல்துறைக்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சிதான் உத்தரவிட்டது.

சிஐடியால் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. போலீசார் பூர்த்தி செய்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதற்குள் ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் பிரசாந்த் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|