Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் தீ விபத்து

ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் தீ விபத்து

By: Karunakaran Wed, 01 July 2020 10:25:51 AM

ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் தீ விபத்து

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதியில் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று அந்த மருத்துவமனையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

iran,hospital fire,oxygen tank explode,fire accindent ,ஈரான், மருத்துவமனை , ஆக்ஸிஜன் தொட்டி வெடித்தது, தீ விபத்து

மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள பலர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், அவை தொடரந்து வெடித்து கொண்டே வருகின்றன. இதனால் அங்கு மீட்கும் பணி கடினமாக உள்ளது. இந்த வெடி விபத்து காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :
|