Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவை சேனாதிபதி நியமனத்திற்கு அனந்தி சசிதரன் எதிர்ப்பு

மாவை சேனாதிபதி நியமனத்திற்கு அனந்தி சசிதரன் எதிர்ப்பு

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:05:40 AM

மாவை சேனாதிபதி நியமனத்திற்கு அனந்தி சசிதரன் எதிர்ப்பு

மாவை சேனாதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு... மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக நியமித்திருப்பது தவறானது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 ஆக இருந்து, 16 ஆக இருந்து தற்போது, 3 ஆக உள்ளது. இன்னும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும் நிலைப்பாடுகளை எட்டிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளாராக, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

Tags :