Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளது ... அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளது ... அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

By: vaithegi Sun, 30 Apr 2023 10:25:34 AM

கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளது   ...   அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

சென்னை: திருவாரூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாகவே டெட் தேர்வு நடத்தபடவில்லை

அரசாணை 149 தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதையடுத்து அதற்கான முடிவு எடுக்கப்படும் போது போட்டித்தேர்வு நடத்தப்படும். மேலும் சி.ஏ.ஜி. அறிக்கையின்படி கடந்த ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் 511 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,

anbil mahesh,department of education ,அன்பில் மகேஷ்,பள்ளிக்கல்வித்துறை

மேலும் உயர்நிலைப்பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களின் விகிதம் குறைந்திருந்ததாகவும், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஆனால் அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வந்துள்ளனர் என்று சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.

Tags :