Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் ... அன்பில் மகேஷ்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் ... அன்பில் மகேஷ்

By: vaithegi Sat, 08 Oct 2022 6:18:42 PM

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்   ...   அன்பில் மகேஷ்

சென்னை: விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் .... நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.

இவர்களில் மொத்தம் 67,787 ( 51.3%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலையில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா நடைபெற்றது.

anbil mahesh,neet exam ,அன்பில் மகேஷ், நீட் தேர்வு

இதனை அடுத்து இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தமிழக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :