Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உதயநிதி ஸ்டாலின் அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் ... அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின் அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் ... அன்பில் மகேஷ்

By: vaithegi Sun, 27 Nov 2022 8:35:38 PM

உதயநிதி ஸ்டாலின் அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக  வேண்டும்   ...     அன்பில் மகேஷ்

சென்னை: இன்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற உதயநிதி ஸ்டாலின் அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

anbil mahesh,udayanidhi stalin ,அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின்

இதனை அடுத்து தண்டையார்பேட்டையில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளையும் நிதி உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரிம் மூர்த்தி மாவட்ட செயலாளர் இளைய அருணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :