Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்வு .. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்வு .. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

By: vaithegi Fri, 12 Aug 2022 3:42:23 PM

தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்வு ..  அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் உணவு பொருட்களின் மீது விதித்த வரி விதிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி வரும் அதிக விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் உணவு பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பால்நிறுவனம் 1.25 கோடி லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன.

anbumani ramadoss,condemned ,அன்புமணி ராமதாஸ், கண்டனம்

எனவே இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் விலை உயர்வால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :