Advertisement

மிலாது நபி திருநாளையொட்டி அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

By: vaithegi Thu, 28 Sept 2023 09:43:25 AM

மிலாது நபி திருநாளையொட்டி அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ..பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய இஸ்லாமியர்களின் வழிகாட்டி முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6 வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். 40 வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.

anbumani ramadoss,milatu nabi , அன்புமணி ராமதாஸ்,மிலாது நபி


இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமலிருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என்ற குரானின் பாடங்களை இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் போதித்தார்.

மேலும் நபிகள் நாயகம் போதித்ததையெல்லாம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி தவழும் அன்பு இல்லமாக மாறும். அதை செய்வது தான் அனைவரின் கடமையும் ஆகும். அதன்படி அவரது போதனைகளை பின்பற்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற உறுதியேற்போம்."என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :