Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு போக்குவரத்து கழகங்களில் எவ்வகையிலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கூடாது .. அன்புமணி வேண்டுகோள்

அரசு போக்குவரத்து கழகங்களில் எவ்வகையிலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கூடாது .. அன்புமணி வேண்டுகோள்

By: vaithegi Mon, 06 Mar 2023 6:21:05 PM

அரசு போக்குவரத்து கழகங்களில் எவ்வகையிலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கூடாது  ..  அன்புமணி வேண்டுகோள்

சென்னை: கலைஞர் காலத்தில் தனியார் பேருந்துகள் அரசுடைமையான நிலையில், அதற்கு எதிராக செயல்படக் கூடாது என வேண்டுகோள் ... கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் முறையில் இந்தாண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.இதனை அடுத்து இது பற்றி விளக்கமளித்த அமைச்சர் சிவசங்கர், தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.

anbumani,government transport ,அன்புமணி ,அரசு போக்குவரத்து

அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது. தனியார் பேருந்து விவகாரம் பற்றி அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது. அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் எந்த வகையிலும் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கூடாது. கலைஞர் காலத்தில் தனியார் பேருந்துகள் அரசுடைமையான நிலையில், அதற்கு எதிராக செயல்படக் கூடாது என அவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

Tags :