Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அந்தியூர் கால்நடை சந்தை காங்கேயம் காளைகள் ஒரு ஜோடி லட்சக்கணக்கில் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தை காங்கேயம் காளைகள் ஒரு ஜோடி லட்சக்கணக்கில் விற்பனை

By: Nagaraj Mon, 27 Mar 2023 8:17:43 PM

அந்தியூர் கால்நடை சந்தை காங்கேயம் காளைகள் ஒரு ஜோடி லட்சக்கணக்கில் விற்பனை

அந்தியூர்: கால்நடை சந்தையில் விற்பனை... அந்தியூர் கால்நடை சந்தையில் ஒரு ஜோடி காங்கேயம் காளைகள் ரூ.1.75 லட்சத்துக்கு விற்பனையானது. அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது.

இந்த சந்தைக்கு அந்தியூர், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, எடப்பாடி, கொங்கணாபுரம், குமாரபாளையம், ஈரோடு, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

andiyur,bull,kangeyam,market,sale, ,அந்தியூர், காங்கேயம், காளை மாடு, சந்தை, விற்பனை

பர்கூர் இன பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.

Tags :
|
|
|