Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

By: Nagaraj Tue, 23 Aug 2022 11:47:52 AM

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

புதுடில்லி: பிரதமருடன் சந்திப்பு... பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஆா். ஜெகன்மோகன் ரெட்டி, போலாவரம் நீா்ப்பாசன திட்டத்துக்கு அவசர நிதியாக ரூ.10,000 கோடியை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

ஆந்திர முதல்வா் டில்லிக்கு 2 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளாா். பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்த ஆந்திர முதல்வா், போதிய நிதி இல்லாத காரணத்தால் போலாவரம் நீா்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் காலத்தாமதம் ஏற்படுவதாகவும், திருத்தப்பட்ட செலவினமான ரூ. 55,548.47 கோடிக்கு ஒப்புதல் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டாா்.

மேலும், இத்திட்டத்தின் கட்டுமான செலவிற்காக ரூ.10,000 கோடியை அவசரகால நிதியாக விடுவிக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தாா்.

prime minister,meeting,andhra chief minister,request,international airport ,
பிரதமர், சந்திப்பு, ஆந்திர முதல்வர், கோரிக்கை, சர்வதேச விமான நிலையம்

போலாவரம் நீா்பாசனத் திட்டம், 2.91 லட்சம் ஹெக்டோ் பாசன பரப்பிற்கும், 960 மெகா வாட் மின்உற்பத்திக்கும், தொழிற்சாலைகள் மற்றும் 540 கிராமங்களின் நீா்த்தேவையைப் பூா்த்திசெய்யும் வகையிலும், கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிதிக் குழுவால் மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய் இடைவெளிக்கான நிதி ரூ.32,625 கோடியையும், 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது, ஒய்எஸ்ஆா் மாவட்டத்தில் உருக்கு ஆலை அமைப்பது, விஜயநகர மாவட்டத்தில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது போன்ற கோரிக்கைகளையும் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமரிடம் முன்வைத்தாா். பிரதமா் - ஆந்திர முதல்வா் சந்திப்பு 40 நிமிஷங்களுக்கு நீடித்தது.

Tags :