ஆந்திராவில் சிறுமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை சக்ஸஸ்
By: Nagaraj Mon, 24 Apr 2023 7:21:33 PM
ஆந்திரா: சிறுமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை... ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இதயத்தை சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தினர்.
மூளை சாவு அடைந்த மாணவர் ஒருவரின் இதயம் அங்கிருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட இதயத்தை, இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்த சிறுமி ஒருவருக்கு வெற்றிகரமாக மருத்துவர்கள் பொருத்தினர்.
Tags :
girl |
doctors |
hospital |