Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த நாள்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

இந்த நாள்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Thu, 17 Nov 2022 7:02:22 PM

இந்த நாள்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :- 17.11.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனை அடுத்து 18.11.2022: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

hurricane,pisces ,சூறாவளிக்காற்று ,மீனவர்கள்

19.11.2022: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் 20.11.2022 முதல் 21.11.2022 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :