Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

By: Karunakaran Thu, 18 June 2020 1:07:38 PM

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அதிகமாக கூடுவது, விழா நடத்துவது போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. மத கூட்டம், திருவிழாக்கள் போன்றவை கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற ரத யாத்திரை, இந்த ஆண்டு 23-ந்தேதி நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ரத யாத்திரையில் கலந்துகொள்வர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தற்போது விழாவை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

puri jagannath,animal welfare activists,ratha yatra,elephants ,பூரி ஜெகநாதர்,யானை,விலங்கு நல ஆர்வலர்கள்,ரத யாத்திரை

ரத யாத்திரையில் ரதங்களை இழுக்க ராட்சத எந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், யானைகள் மூலம் ரதங்களை இழுக்க எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர். விலங்கு நல வாரிய ஒடிசா மாநில செயலாளர் ஜிபன் பல்லவ் தாஸ் இதுகுறித்து கூறுகையில், கடந்த 2002-ம் ஆண்டில் ரத யாத்திரையில் பங்கேற்ற லட்சுமி என்ற யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பது, மேளதாளங்கள் இசைப்பது போன்றவற்றால் ஏற்படும் பயங்கர சத்தத்தால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் யானைகளை பயன்படுத்துவதை ஒடிசா அரசு கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :