Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்த அண்ணா

திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்த அண்ணா

By: Nagaraj Fri, 15 Sept 2023 6:15:02 PM

திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்த அண்ணா

சென்னை: தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் பேச்சாற்றலில் ஈடு இணையற்றவராக விளங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று
தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949-இல் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கி, குறுகிய காலத்திலேயே அண்ணா தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்தார்.
தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் அண்ணா பேச்சாற்றலில் ஈடு இணையற்றவராக இருந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக (1967 – 1968) சட்டப்பேரவையில் அண்ணா நிகழ்த்திய உரைகளை கேட்டவன் என்ற முறையில், அவரது அற்புதமான சொற்பொழிவுகளைக், கேட்பதற்கு ஒரு “கொடுப்பினை’ வேண்டுமென்பது என் கருத்து.
அண்ணாவால் வேகமாக வளர்ந்த தி.மு.க. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பங்கு கொண்டு, 1957-இல் 15 உறுப்பினர்களுடனும், 1962-இல் 50 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இருப்பினும், 1962-இல் அண்ணா காஞ்சியில் நடைபெற்ற தேர்தலில், பண பலத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தார் .
அது ஒருவகையில் நல்ல சம்பவமாக மாறியது . அண்ணா உடனடியாக, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய ஆங்கிலப் புலமையையும், பேச்சாற்றலையும், அறிவையும் இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக கிடைத்தது. அந்தக்காலத்தில் தி.மு.க. “திராவிட நாடு’ கொள்கையில் உறுதியாக இருந்தது.

dravidian nation,end point,patriotism,period,predicament, ,இக்கட்டான நிலை, காலக்கட்டம், திராவிட நாடு, நாட்டுப்பற்று, முற்றுப்புள்ளி

மாநிலங்களவையில், தன்னுடைய கன்னிப்பேச்சில் “ஐ வுட் ராதர் ஹேவ் ஏ கமிட்டி ஆஃப் நேஷன்ஸ் தேன் ஏ காங்கலோமெரேஷன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்று தனது கம்பீரமான குரலில் பேசி முடித்தார். அன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அண்ணா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று “உங்களின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது’ எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சி நடந்த ஆறு மாதங்களுக்குள் (1962 நவம்பரில்) சீன நாட்டின் ராணுவப் படைகள் நம்முடைய வடகிழக்கு பகுதியான தேச்பூரை கடுமையாக தாக்கின. உடனடியாக அண்ணா, தன்னுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி தம்முடைய கட்சி காங்கிரசை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரதப்பிரதமர் பண்டித நேருவின் மத்திய சர்க்காருடன் தி.மு.க. முழுமையாக ஒத்துழைக்கும் என அறிவித்ததுடன்” நாட்டின் பிரிவினை கொள்கையை கைவிட முடிவெடுத்துள்ளது’ எனக் கூறி, “திராவிட நாடு’ பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Tags :
|