Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா , பெரியார் பிறந்தநாள் ... பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ... தமிழக அரசு

அண்ணா , பெரியார் பிறந்தநாள் ... பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ... தமிழக அரசு

By: vaithegi Tue, 13 Sept 2022 12:54:02 PM

அண்ணா , பெரியார் பிறந்தநாள்   ...    பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ...  தமிழக அரசு


சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு என 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்களுக்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உயரும்!, 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும்,

இதை அடுத்து கல்லூரி மாணவர்களுக்கு 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

tamil nadu government,school,college students. speech competitions ,தமிழக அரசு,பள்ளி ,கல்லூரி மாணவர்கள்.பேச்சுப்போட்டிகள்

மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1. பெண்ணடிமை தீருமட்டும், 2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும்,

கல்லூரி மாணவர்களுக்கு 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதனையடுத்து இதில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|