Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் காற்றுடன் பலத்த மழை... அண்ணா சாலை தர்கா பெயர்ந்து விழுந்தது!

சென்னையில் காற்றுடன் பலத்த மழை... அண்ணா சாலை தர்கா பெயர்ந்து விழுந்தது!

By: Monisha Thu, 26 Nov 2020 09:21:15 AM

சென்னையில் காற்றுடன் பலத்த மழை... அண்ணா சாலை தர்கா பெயர்ந்து விழுந்தது!

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் மிகுதியாகவே இருந்தது. அதே வேளை கனமழையும் பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அருகே உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் சேதம் அடைந்தது.

chennai,dargah,wind,heavy rain,surveillance camera ,சென்னை,தர்கா,காற்று,பலத்த மழை,கண்காணிப்பு கேமரா

தர்காவின் மேற்கூரை சாய்ந்து விழுந்த நேரத்தில் நல்லவேளையாக மக்கள் யாரும் நடமாடவில்லை. அதே வேளை அந்த சமயத்தில் தர்காவிலும் ஆள் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஒருவேளை காற்றின் வேகம் தாங்காமல் தர்காவின் மேற்கூரை அருகேயுள்ள மின்கம்பத்தில் விழுந்திருந்தால் நிச்சயம் விபரீதம் நிகழ்ந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. அண்ணா சாலை தர்கா 100 ஆண்டு பழமை வாய்ந்தது.

Tags :
|
|