Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிப்பு

புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 1:41:51 PM

புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது.

இதை அடுத்து கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாட திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது.

new syllabus,anna university , புதிய பாடத்திட்டம் ,அண்ணா பல்கலைக்கழகம்

எனவே இந்த நிலையில் புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்படி மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு பாடத்திட்டம் வரும் 17ம் தேதி இறுதி செய்யப்படும்.

இதனால், தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் புதிய பாடத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த உள்ள என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

Tags :