Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 30 Sept 2022 2:51:40 PM

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை ... காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1-ம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது.

vacation,college of engineering ,விடுமுறை ,பொறியியல் கல்லூரி

எனவே அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆயுதபூஜை விடுறைக்கு சோந்த ஊர்களுக்கு படையெடுக்கு மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Tags :