Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு

By: vaithegi Tue, 13 Dec 2022 9:08:21 PM

ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு

சென்னை: தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு .... வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவானதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிலையில் 2 தினங்கலூக்கு முன்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அதையடுத்து தமிழகத்தில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

semester examination,anna university , செமஸ்டர் தேர்வு,அண்ணா பல்கலைக்கழகம்

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு இப்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் இப்போது டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Tags :