Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Tue, 25 July 2023 1:31:55 PM

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு பகுதிகளில் அந்த கட்சியினர் சமூக நலத்திட்டங்களை செய்து கொண்டு வருகின்றனர். மேலும் அத்துடன் ட்விட்டர் தளத்தில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மருத்துவர் ராமதாஸுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

annamalai,ramadoss,the founder of bamaka ,அண்ணாமலை ,பாமக நிறுவனர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :