Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் நிறுத்தப்பட்டதற்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் நிறுத்தப்பட்டதற்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை

By: Nagaraj Sat, 29 Apr 2023 6:52:53 PM

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் நிறுத்தப்பட்டதற்கு விளக்கம் கொடுத்த அண்ணாமலை

கர்நாடகா: கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பபா நிறுத்த கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் ஷிவமொக்கா நகரில் பா.ஜ.க. தமிழ் வாக்காளர் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது மேடையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்த உத்தரவிட்டார் மேலும், அவரது வற்புறுத்தலின் பேரில், கன்னட வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்தும் பா.ஜ.க.வைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது எப்படி அக்கறை காட்டுவார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

annamalai,divorce,explanation,greeting,half,tamil mother, ,அண்ணாமலை, தமிழ் தாய், பாதி, வாழ்த்து, விளக்கம், விவகாரம்

மேடை நாகரிகம் கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கன்னடமொழிக்கும் தாய் தமிழ்மொழி தான். கன்னடத்திற்காக தமிழை இழிவுபடுத்துவது தாய்க்கும் தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து பேட்டி அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஈஸ்வரப்பா எந்த தவறும் செய்யவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் பாடப்படவில்லை என்று ஷிவமோகா தமிழ்த் தாய் சங்கத்தின் செயலாளர் தண்டபாணி கூறியுள்ளார்.

Tags :
|