Advertisement

அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்

By: vaithegi Sun, 01 Oct 2023 09:43:55 AM

அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்


சென்னை: இன்று டெல்லி பயணம் ... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது.

இதனை ஆடுது இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை, பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல். நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறினார்.

annamalai,delhi ,அண்ணாமலை ,டெல்லி


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். கோவை விமான நிலையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் டெல்லி பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையின் பேச்சே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், டெல்லி பயணத்தின் போது பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tags :