Advertisement

அண்ணாமலை நாளை டெல்லி செல்லவுள்ளார்

By: vaithegi Sat, 30 Sept 2023 1:25:36 PM

அண்ணாமலை நாளை டெல்லி செல்லவுள்ளார்


சென்னை: நாளை டெல்லி பயணம் ..அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிவால், அடுத்தகட்ட திட்டமிடல் தொடர்பாக வருகிற அக். 3-ம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து அதன்படி, வருகிற அக். 1-ம் தேதி (நாளை) சென்னையிலிருந்து விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

annamalai,delhi ,டெல்லி ,அண்ணாமலை

இதையடுத்து டெல்லியில், அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், அதிமுக வெளியேறிய நிலையில், யாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு, தேசிய தலைவர்களின் கருத்தை பெற்று, அதன்படி சென்னையில் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்க இருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பிறகு, அண்ணாமலையின் முதல் டெல்லி பயணமாக இருப்பதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதாக பாஜக வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது.


Tags :