Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 ,11,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

12 ,11,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

By: vaithegi Mon, 27 June 2022 12:17:03 PM

12 ,11,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகம்: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பொதுத் தேர்வு எழுத வராதவர்கள், தனித்தேர்வர்களுக்கு வரும் ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலும் துணைத் தேர்வு நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வரும் ஜூலை 4-ஆம் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் படித்த பள்ளியிலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

by-election,students ,துணைத் தேர்வு,மாணவர்கள்

ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மிக கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வு மற்றும் தேர்விற்கான அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :