Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஹ்ரைன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு

பஹ்ரைன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு

By: Nagaraj Sat, 12 Dec 2020 10:04:44 PM

பஹ்ரைன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிப்பு

அனைவருக்கும் கொரோனா மருந்து இலவசம்... 15 இலட்சம் மக்கள் தொகை கொண்ட வளைகுடா நாடான பஹ்ரைனில், அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், பிற நாடுகளில் இருந்து வந்து இங்கு வசிப்பவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bahrain,government,approval,urgent need,corona vaccine ,பஹ்ரைன், அரசாங்கம், ஒப்புதல், அவசர தேவை, கொரோனா தடுப்பூசி

அதே சமயம் மக்களுக்கு எந்த தடுப்பூசி போடப்படும் என்பது அந்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை. மேலும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 27 மருத்துவ மையங்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு முன்பாக ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பஹ்ரைன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :