Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு

By: Nagaraj Wed, 17 Aug 2022 4:58:52 PM

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு

சென்னை: 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்களை சந்திக்கும் போராட்டம் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார். ஆனால் 20-24 வயதினர் மத்தியில் வேலையின்மை விகிதம் 42 சதவிகிதம் எனும் அளவை தொட்டு விட்டதாகவும், 90 கோடி இந்திய உழைக்கும் மக்களில் சரிபாதி பேருக்கு முறையான வேலை கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். பட்டினி நிறைந்த மக்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளின் பட்டியலில் 101-வது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா.

இந்நிலையில் மக்களின் பசியை போக்குவதற்கு பதிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும் ஜி.எஸ்.டி. வரியை விதித்து அவர்களை மேலும் மேலும் வதைக்கிறது. உப்புக்கு வரி போட்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால் சோற்றுக்கும் கூட வரி போடுகிறது மோடி அரசு. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து ஏழை, எளிய மக்கள் உயர் கல்வி பெற முடியாத வகையில் சீரழித்துள்ளது.

public meeting,party,politics,marxist,report,prakash karat ,பொதுக்கூட்டம், கட்சி, அரசியல், மார்க்சிஸ்ட், அறிக்கை, பிரகாஷ் காரத்

மாநில உரிமைகள் பறிப்பு, நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பு, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை தர மறுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் மூலம் மிரட்டுவது, தேசிய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி எதிர்கட்சியினரை கைது செய்வது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கங்களை முன்னிறுத்தியும், மோடி அரசின் 8 ஆண்டு கால நாசகர ஆட்சியை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை, 5000 குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து பிரச்சாரம் நடத்த உள்ளது.

செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் மாநில தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|